முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியில், மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்டோர், சிகிச்சையின்றி தவித்து வருகின்றனர். ஆணைசேரியில், 200க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. சில நாட்களாகவே இங்கு, மர்மகாய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். மேலக்கொடுமலூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதி மக்களுக்கு, போதிய சிகிச்சை கிடைக்கவில்லை. முதுகுளத்தூர், கமுதி அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேல்சிகிச்சைக்காக, ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில், மூன்று பேர் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆணைசேரி கோவிந்தன் கூறியதாவது: வீட்டின் அருகே விவசாய நிலங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து, பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலக்கொடுமலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, இதுவரை சிகிச்சை அளிக்க யாரும் வரவில்லை. பாதிக்கப்பட்ட பலர், கடன் வாங்கி, மேல்சிகிச்சைக்காக பரமக்குடி, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் துணை சுகாதார இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ""மருத்துவ குழுவினரை அனுப்பி, போதிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.