சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் மணிமுத்து மீது ரூ.1 கோடி நிலமோசடி புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை காஞ்சிரங்கால் மகேந்திரன், எஸ்.பி., சக்திவேலுவிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: சிவகங்கை இலந்தங்குடிபட்டியில் சன்னாசி- சன்னம்மாளுக்கு சொந்தமான (சர்வே எண்-211/1, 211/4 ல்) 2 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை, அவரது மகள் வழி பேத்தி ராமு அம்மாள் மூலம், எனது மனைவி செல்வி பெயரில், கடந்த 2009 ல் பத்திரம் பதிவு செய்தோம். இதன் பின், என் மனைவி பெயருக்கு பட்டாவும் பெற்று விட்டோம். இந்நிலையில், என் மனைவி பெயரில் இருந்த சொத்தை சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் மணிமுத்து, இலந்தங்குடிபட்டி நடராஜன், அருவகம், இலுப்படிக்குடி பாண்டி ஆகியோரால், இறந்து போன ராமன் மகன் மாரியப்பன் பெயருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பத்திர பதிவு செய்துள்ளார்.
இதற்கு மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். அரசு அதிகாரிகள் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி, எனது மனைவி பெயரிலான ரூ.1கோடி மதிப்புள்ள நிலத்தை, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ள மணிமுத்து மற்றும் அவருக்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
நில அபகரிப்பு போலீசார் கூறுகையில், "இரு தரப்பு ஆவணங்களை பெற்று விசாரிக்கிறோம். யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இப்புகார் குறித்து,மணிமுத்துவின் கருத்தை அறிய,இருமுறை அவரது மொபைலில் தொடர்பு கொண்ட போது,எடுக்கவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.