மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் வேலுச்சாமி தாக்கல் செய்த மனு: சிராவயலில் ஜன.,16 ல் மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். கலெக்டரிடம் அனுமதி கோரி, டிச., 24 ல் விண்ணப்பித்தோம். நடவடிக்கை இல்லை. மஞ்சுவிரட்டு நடந்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதிகள் கே.என். பாஷா, பி.தேவதாஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் காமேஸ்வரன் ஆஜரானார். நீதிபதிகள்,"சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.