மதுரை: மதுரை செக்காணூரணி ரோட்டோர கடைகளில், துணிகளுக்கு பயன்படுத்தும் ஆரஞ்சு சாயத்தில் ஊறவைத்த, வறுத்த, 150 கிலோ அளவுள்ள சிக்கன், கைப்பற்றப்பட்டது. செக்காணூரணி "டாஸ்மாக்' அருகே மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ரோட்டோரக் கடைகளில் கண்ணைக் கவரும் ஆரஞ்சு வண்ண துணிச் சாயத்தை, சிக்கனில் ஊறவைத்தனர். அதை சுடச்சுட எண்ணெயில் பொறித்து, வரிசை கட்டி அடுக்கி வைத்திருந்தனர். 100 கிராம் அளவில் கிடைத்த சிக்கனை, "டாஸ்மாக்' பிரியர்கள், சப்புக் கொட்டி வாங்கி சாப்பிட்டனர்.
உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறைக்கு புகார் எழுந்தது. நியமன அலுவலர் சுகுணா தேவி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையிட்டனர். 25 கடைகளில் 150 கிலோ எடையுள்ள ஊறவைத்த, வறுத்த சிக்கன், சாயப்பொடியை கைப்பற்றினர்.
சுகுணாதேவி கூறியதாவது: டெக்ஸ்டைல் மில்களுக்கு பயன்படுத்தும் "ஆசிட் ஆரஞ்ச்' சாயத்தை, சிக்கனுக்கு பயன்படுத்தியுள்ளனர். இது புற்றுநோயை ஏற்படுத்தும். வயிற்றில் ஓட்டை கூட விழும். பாக்கெட்டில், "உணவுக்கான சாயம் அல்ல' என்று எழுதப்பட்டிருக்கிறது. இருந்தும், ரோட்டோர கடைகளில், இந்த சாயத்தை பயன்படுத்தியது தவறு. மதுரையில் டெக்ஸ்டைல் மில்கள் இல்லை. சாயம் எந்த கடையில் விற்கப்படுகிறது, என தொடர்ந்து சோதனையிடப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.