HC rejects sessions court order | பராமரிப்புத்தொகை வழங்க நிர்பந்தமா : செஷன்ஸ் கோர்ட் உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பராமரிப்புத்தொகை வழங்க நிர்பந்தமா : செஷன்ஸ் கோர்ட் உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு தொகை குறித்து செஷன்ஸ் கோர்ட் உத்தரவு ரத்து செய்து, ஜே.எம்.,கோர்ட் உத்தரவுப்படி, பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி தூத்துக்குடி பகுதியை சேர்ந்த வாசுகி. பிரிந்து வாழும் இவர், பராமரிப்புத்தொகை வழங்க கணவருக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ( ஜே.எம்.,) கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பின், இருதரப்பும் சமாதான "மெமோ' தாக்கல் செய்தனர். மனைவிக்கு, மாதம் 3000 ரூபாய் பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தூத்துக்குடி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், ராஜா சீராய்வு மனு தாக்கல் செய்தார். அவர்,"குறுக்கு விசாரணையில், நான் 3000 ரூபாய் பராமரிப்புத்தொகை வழங்க சம்மதிக்கவில்லை. சம்மதிக்காவிடில், வேலையை இழக்க நேரிடும் என மாஜிஸ்திரேட் நிர்பந்தம் செய்ததால், ஒத்துக்கொண்டேன். ஜே.எம்.,கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என குறிப்பிட்டார். நீதிபதி,"மனுதாரருக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இடைக்காலமாக, மனைவிக்கு 1500 ரூபாய் பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து ராஜா ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி டி.சுதந்திரம்: ஜே.எம்.,கோர்ட்டில் சமாதான ஒப்பந்தத்தில் மனுதாரரும், அவரது வக்கீலும் கையொப்பமிட்டுள்ளனர். வக்கீல் ஆஜராகியிருந்தபோது, மாஜிஸ்திரேட் எப்படி மனுதாரரை நிர்பந்திக்க முடியும்? மாஜிஸ்திரேட் நிர்பந்தித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. இதை, இக்கோர்ட் பொறுத்துக்கொள்ளாது. மனுவை, செஷன்ஸ் கோர்ட் விசாரணைக்கே ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. நிர்பந்தம் நடந்ததா? என ஜே.எம்., கோர்ட்டில், அறிக்கை கோரியிருக்க வேண்டும்.
இது, ஒரு நீதிபதி, மற்றொரு நீதிபதி மீதான குற்றச்சாட்டை அங்கீகரிப்போதுபோல் உள்ளது. இது, ஒரு தவறான
முன்னுதாரணம். ஜே.எம்.,கோர்ட் உத்தரவை ரத்து செய்த செஷன்ஸ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை