2 agents arrested | வெளி நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் : ஏஜன்ட் 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளி நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் : ஏஜன்ட் 2 பேர் கைது

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம்: வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த இலங்கை அகதிகளுக்கு ஏஜன்டாக செயல்பட்ட இரண்டு அகதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை அகதிகள் திருச்சி, ராமேஸ்வரம், மண்டபம், மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ளனர். இந்த முகாம்களில் இருந்து, 51 பேர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல கேரளா தேக்கடி சென்றனர். அங்கு, ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்களை, கேரளா போலீஸ் உதவியுடன், தேனி மாவட்ட கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.
கம்பத்தில் விசாரணை மேற்கொண்டதில், வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆசை ஏற்படுத்தி, ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதாக திருச்சி முகாமை சேர்ந்த அருள்சீலன், 40, மதுரை முகாமை சேர்ந்த உமா ரமணன், 42, இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், நடத்திய விசாரணையில், விழுப்புரத்தை சேர்ந்த பாபு என்பவரிடம் இதற்கான ஏற்பாடுகளை செய்து தர கூறியதாகவும், ஐயா என்ற ஏஜன்ட் ஒருவரின் உதவியோடு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும் ஒப்புக் கொண்டனர். முகாமிற்கு 15 பேர் சென்றனர்: பிடிபட்ட 51 பேர்களில் விசாரணை முடிந்த 15 பேரை, திருச்சி கரு மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு அந்தந்த முகாம் பொறுப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு,ஒப்படைக்கப்படுவர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை