Kerala govt ban to import cows from TN | கேரளாவிற்கு மாடுகள் கொண்டு செல்ல தடை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவிற்கு மாடுகள் கொண்டு செல்ல தடை

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கொண்டு செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக தினமும் மாடுகள் இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தேனி மாவட்டம் கோகிலாபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு சொந்தமான 10 மாடுகள் திடீரென பலியாகின. ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியில், அழகுமலை என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடுகளும், ஆடுகளும் பலியாகின. கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலாக இருக்கலாம் என கால்நடை துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கால்நடைத்துறையினர். கோகிலாபுரத்தை சுற்றிலும் உள்ள 7 கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். எளிதில் பரவும் தொற்றுநோய் என்பதால், தமிழகத்தில் இருந்து ஆடு,மாடுகளை கேரளாவிற்கு கொண்டு வர இடுக்கி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சோதனை சாவடிகளை கடந்து மாடுகள், ஆடுகள் கேரளாவிற்கு செல்ல நேற்று அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை