திண்டுக்கல்: ஆசிரியையிடம் உள்ள கள்ளத்தொடர்பால், அவரது கணவரை கொலை செய்ய முயற்சித்த இன்ஸ்பெக்டர் மீது, போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில், இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குணசேகரன், 42. இவருக்கும், திண்டுக்கல் அருகே சாலையூரை சேர்ந்த, தனியார் பள்ளி ஆசிரியை உமா, 30, என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை, கணவர் மயில்சாமியும், ஊர் பொதுமக்களும் பல முறை கண்டித்துள்ளனர். ஆனால் இன்ஸ்பெக்டர், ஆசிரியையுடனான தொடர்பை விடவில்லை. கடந்தாண்டு நவ., 21ல், இன்ஸ்பெக்டர் குணசேகரனும், உமாவும் வீட்டில் இருந்துள்ளனர். இதை உமாவின் கணவர் மயில்சாமி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டரும், உமாவும், டாடா இண்டிகா காரில் மயில்சாமியை கடத்தி சென்றனர். மயில்சாமியின் கழுத்தை இன்ஸ்பெக்டர் நெரித்த போது, அவர் கூச்சலிட்டார். இதை கேட்ட ஊர் பொதுமக்கள் கூடி, காரை மறித்து இன்ஸ்பெக்டரை தாக்கி, வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். வடமதுரை போலீசார், இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மயில்சாமி, மதுரை ஐகோர்ட்டில் தன் மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்துள்ள இன்ஸ்பெக்டர் மீது, போலீசார் வழக்குபதிவு செய்யாததது குறித்து, மனுத்தாக்கல் செய்தார். இன்ஸ்பெக்டர், உமா மீது வழக்குபதிய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார், இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
இன்ஸ்பெக்டர், வேடசந்தூரில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் போதே ஆசிரியையிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நவ., 21ல், சாலையூரில் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் தாக்கியது குறித்து, வேடசந்தூர் டி.எஸ்.பி., விசாரணை நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மீது, துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் ஏற்கனவே, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.