அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள புளியம்பட்டி பகுதியில், 5000 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் கருகியதால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள், விரக்தியில் உள்ளனர். மாவட்டத்திலே அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில்தான், 5000 ஏக்கரில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி மக்கள், தங்கள் விவசாய நிலங்களில் பருத்தி, நெட்டை மற்றும் குட்டை சோளம், மல்லி, சூரியகாந்தி, குதிரைவாலி, மக்காச்சோளம், மாட்டு தீவன நாற்று போன்றவைகளை பயிரிடுவர். ஆண்டிற்கு ஒரு மழை பெய்தாலே போதும், வெள்ளாமை எடுத்து விடுவர். ஆனால், கடந்த ஆண்டு மழை பெய்யாததால், பயிர்கள் அனைத்தும், அரைகுறையாக முளைத்தும், பாதி பயிர்கள் முளை விடாமலும், ஓரளவு செடியான பயிர்கள் தண்ணீர் இல்லாததாலும், கருகி போயின.
மக்காச்சோளம் 2 ஆயிரத்து 500 ஏக்கர், குட்ட சோளம் ஆயிரத்து 100 ஏக்கர், மல்லி 500 ஏக்கர், சூரிய காந்தி 500 ஏக்கர், குதிரைவாலி 200 ஏக்கர், பருத்தி 100 ஏக்கர், சோளநாற்று 200 ஏக்கர் என,5 ஆயிரத்து 100 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட பயிர்கள், மழை இல்லாமல் கருகின. விவசாயிகள், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், ஏக்கருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயம் செய்துள்ளனர். ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காலங்காலமாக விவசாயம் செய்து வருவதால் பாதிப்பு அடைந்தவர்கள், வேறு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் 500 க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு, தீவனத்திற்கு கூட வழியில்லாத வகையில், விவசாயம் மழை இல்லாமல் பொய்த்து விட்டது.
விவசாயி தாமோதர கண்ணன்,""நான் 35 ஏக்கரில் மக்காச்சோளம், நெட்டை சோளம் பயிர்கள் பயிரிட்டு உள்ளேன். மழை இன்மையால் அனைத்தும் கருகி போனது. கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தும், பலன் இல்லாமல் போனது,''என்றார்.
வரதராஜ்,"" 30 ஏக்கரில்சோளம், கம்பு, நாற்று பயிரிட்டுள்ளேன். எந்த பயிரும் முளைக்கவில்லை. மாட்டுக்கு தீவனத்திற்கு கூட வழி இல்லை. அடமானத்தில் வைத்த நகைகளை திருப்பவும் வழி இல்லை, ''என்றார்.
அழகர்சாமி,""90 ஏக்கர் நிலத்தை, குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். மல்லி, கம்பு, சோளம் போட்டுள்ளேன். ஒன்று கூட வரவில்லை. கடன் வாங்கி போட்ட பணமும் போய் விட்டது. குத்தகை பணமும் கொடுக்க முடியவில்லை,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.