திருப்பூர்: பின்னலாடை உற்பத்தியாளர்களிடம், 33 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, டில்லி நிறுவனம் மீது, எஸ்.பி.,யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு குழுவினர், திருப்பூர் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள மனு: டில்லியை சேர்ந்த, "லில்லி புட் கிட்ஸ் வேர் லிமிடெட்' என்ற நிறுவனம், திருப்பூரில், 40க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து, பின்தேதியிட்ட காசோலை வழங்கி, பின்னல் ஆடைகளை வாங்கியது. அந்நிறுவனங்கள், 33 கோடி ரூபாய் மதிப்பில் ஆடைகளை கொடுத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அக்காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம் என்று கூறியதோடு, மேலும் மூன்று மாதம் தாமதமாக, அதே தொகைக்கு பழைய காசோலைகளை பெற்று, புதிய காசோலை கொடுத்தனர். தற்போது, அதையும் மாற்ற, மேலும் மூன்று மாதம் தாமதமாக காசோலை கொடுத்துள்ளனர். திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு, 33 கோடி ரூபாயை தராமல் அந்நிறுவனம் இழுத்தடிக்கிறது. ஆர்டர் கொடுக்கும் போது, "90 நாளில் பணம் தருவோம்' என்று சொல்லி, ஆடைகளை வாங்கினர். ஆனால், பணம் தராமல் காலம் இழுத்தடிக்கின்றனர். இதுகுறித்து, 29 தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு குழு சார்பில், சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் பல முறை பேச்சு நடத்தியும் பலனில்லை. அத்தொகையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற எஸ்.பி., மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அனுப்பினார். அப்பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, "திருப்பூரை சேர்ந்த நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகைகள் குறித்த ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன; விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.