திருப்பூர்: சீராக மின் வினியோகம்கோரி, திருப்பூரில் உள்ள அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள், நேற்று வேலை நிறுத்தம் செய்தன. பொங்கல் பண்டிகை ஆர்டர்களை முடிக்க வேண்டி, பிற தொழில் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.
திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில் மொத்தம் 117 அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. சத்தியமங்கலம், உடுமலை, காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து பேப்பர் கொள்முதல் செய்து, பனியன் நிறுவனங்களுக்கு தேவையான அட்டைப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு பல மணி நேரம் ஏற்படும் மின்வெட்டால், இந்நிறுவனங்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சீராக மின் வினியோகம் கோரிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதி அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் நேற்று "ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை நடந்த இப்போராட்டத்தால், ரூ.2 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது. மின்வெட்டு பிரச்னை இருந்தாலும், பொங்கல் பண்டிகைக்கான ஆர்டரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், திருப்பூரில் உள்ள மற்ற தொழில் நிறுவனங்கள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.