சிதம்பரம்: சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்களிடம் கெஞ்சி, கால நீட்டிப்பு கேட்டு திருப்பி அனுப்பினர். சிதம்பரம் - சீர்காழி புறவழிச் சாலைக்காக கடந்த 2005ம் ஆண்டு தனியார் நிலங்கள் வருவாய் துறை மூலம் ஆர்ஜிதம் செய்து, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட சிதம்பரம், தொப்பையன் தெரு சம்சுதீன் மனைவி ஆமீனா பீவி, வனஜா ஆகியோருக்கு தலா 2 லட்சத்து 47 ஆயிரத்து 903 ரூபாயும், சுந்தராம்பாளுக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 596 ரூபாயும் இழப்பீட்டு தொகையாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
இழப்பீட்டுத் தொகை வழங்காததால் மூவரும் சிதம்பரம் சப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
கோர்ட் ஊழியர்கள், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய பல முறை சென்றனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் ஏதேதோ காரணங்களைக் கூறி கோர்ட் ஊழியர்களை திருப்பி அனுப்பி வந்தனர். அதன்பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, கோர்ட் ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மதியம் சப் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்யச் சென்றனர். அப்போது, சப் கலெக்டர் சுப்ரமணியன் அலுவலகத்தில் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் அசோக்குமார், கோர்ட் ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் கெஞ்சாத குறையாக கேட்டு இரண்டு நாள் அவகாசம் பெற்றார். இதனால் கோர்ட் ஊழியர்கள், ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
இது குறித்து சப் கலெக்டரிடம் கேட்டபோது, "கடந்த 2005ம் ஆண்டு புறவழிச் சாலைக்காக இடம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கும் பணிகளை நில ஆர்ஜித பிரிவினர் மேற்கொண்டனர். நில ஆர்ஜிதம் முடிந்ததும், அந்த கோப்புகளை எங்களிடம் ஒப்படைத்தனர். அப்போது இயற்கை இடர்பாடு ஏற்பட்டதால், இதில் கவனம் செலுத்தவில்லை. தற்போது, இந்த கோப்புகள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.