தர்மபுரி: பாலியல் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டல் விடுத்த, நான்கு வாலிபர்களை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம், 24ம் தேதி மாலை, பாலக்கோட்டில் பள்ளிக்கு சென்று வந்த பிளஸ் 1 மாணவியை, அப்பகுதியில் இருந்த கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்று , நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். பாலக்கோடு போலீஸார் விசாரித்து, பாலக்கோட்டை அடுத்த எண்ணடப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ், 28, ரகுநாத், 29, பாலக்கோடு சுகர்மில் காலனியை சேர்ந்த விஜய், 24, ஆறுமுகம், 22 ஆகியோரை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளி வந்த, நான்கு பேரும், கடந்த சில தினங்களாக பாலியல் பலாத்காரம் செய்த பெண் மற்றும் அவரது தாயை வழக்கை வாபஸ் பெறூமறு, தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அப்பெண் கொடுத்த புகார்படி, பாலக்கோடு இன்ஸ்பெக்டர் (பொ) தங்கராஜ் விசாரித்து, ஜெயராஜ், ரகுநாத், மாரிமுத்து, ஆறுமுகம் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தார். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஆஸ்ராகர்க், கலெக்டர் லில்லிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பரிந்துரையை ஏற்றதையடுத்து, நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.