புதுக்கோட்டை: பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தவருக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சிவகாமசுந்தரி, 55. இவர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் மானிய உதவி பெற்று, தன் விவசாய நிலத்தில் ஆழ் குழாய் கிணறுடன் கூடிய பம்புசெட் அமைக்க முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த அவர், ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
பலமுறை இழுத்தடிக்கப்பட்டதால், கடந்த, 31ம் தேதி தாலுகா அலுவலகம் சென்ற சிவகாமசுந்தரி, துணை தாசில்தார் தமிழ்மணியை சந்தித்து, சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த தமிழ்மணி, ஜாதி சான்றிதழ் வழங்காமல், சிவகாமசுந்தரியை அவமரியாதை செய்து அனுப்பியுள்ளார். இது குறித்த செய்தி, காலைக்கதிர் நாளிதழில் வெளியானது.
இந்நிலையில், துணை தாசில்தார், மனுதாரரை தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்கு வந்து, ஜாதி சான்றிதழ் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற மனுதாரர், தாலுகா அலுவலக இளநிலை உதவியாளரிடமிருந்து, ஜாதி சான்றிதழை பெற்றார். அந்த சான்றிதழில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கு பதில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என சான்றளிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாசில்தார் வேலுமணியிடம் முறையிட்டும், நேற்று வரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்கப்படல்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., முத்துமாரியிடம் கேட்ட போது, ""ஜாதி சான்றிதழ் மாற்றி வழங்கப்பட்டது பற்றி, இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி, மனுதாரருக்கு உரிய சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.