கூடலூர்: கடனை திருப்பி கொடுக்காத நபரை காரில் கடத்தி சென்றதாக, திருப்பூரை சேர்ந்த நான்கு பேர், கூடலூரில் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், மேல்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அஜீஸ், 28. இவர், கோவை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இரு மாதங்களுக்கு முன்பு, திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், 29, என்பவரிடம், 60 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். பல முறை பணம் திருப்பி கேட்டும், நாகராஜுக்கு அஜீஸ், பணத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நாகராஜ் உட்பட நான்கு பேர் கூடலூரில் உள்ள அஜீஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். அஜீஸ் அங்கு இல்லை என்பதை அறிந்து, ஏமாற்றமடைந்த அவர்கள், கூடலூரில் தங்கி கண்காணித்துள்ளனர். நேற்று காலை 6.30 மணியளவில், அஜீஸ் மற்றும் அவர் தயார் அல்போன்ஸ் ஆகியோர், கேரளாவுக்கு செல்வதற்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். அங்கு வந்த நாகராஜ் குழுவினர், அஜீஸை பிடித்து, தாங்கள் வந்த இண்டிகா காரில், (டி.என்.39-ஒய்- 6717) கடத்தி சென்றனர். அஜீசின் தயார், கூடலூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நீலகுமார் தலைமையில் போலீசார், துரத்தி சென்று, தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா அருகே, காரை மடக்கி பிடித்தனர்; அதிலிருந்த அஜீசை மீட்டனர். இது தொடர்பாக, நாகராஜ் மற்றும் அவருடன் வந்த திருப்பூரை சேர்ந்த ஜனார்த்தனன், 23; ஸ்டீபன், 30; சங்கர் 27; ஆகியோரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.