திருநெல்வேலி: மத்திய சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிக்கு போதைப்பொருளை மறைத்துவைத்து கொடுத்த
தலைமை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலி, பாளை.,மத்திய சிறையில் அடிக்கடி நடத்தப்படும் சோதனைகளில் கைதிகளிடம் இருந்து மொபைல்போன்கள், சிம்கார்டுகள், கத்தி போன்றவை பறிமுதல்
செய்யப்படுகின்றன. இருப்பினும் கைதிகளுக்கு அவை ரெகுலராக சப்ளை செய்யப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன்புதான் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,திரிபாதி, பாளை சிறையில் ஆய்வு நடத்திவிட்டு
சென்றார். நேற்றுமுன்தினம், மாலையில் கமாண்டோ பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிறையின் மூன்றாவது பிளாக் பகுதியில், தலைமை வார்டன் ராகவன்,தமது கால் ஷூ, சாக்சுக்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் பாக்கெட்டை ஆயுள்தண்டனை கைதி தாமோதரனுக்கு கொடுத்துள்ளார். கமாண்டோ படையினர் அதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆயுள்கைதி தாமோதரன், திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனின் தம்பி ஆவார். சிறைக்குள் போதைப்பொருள்களை கொண்டுசெல்வதை தடுக்கவேண்டிய வார்டனே அதனை கொடுத்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். அவர் மீது துறைவாரியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.