திருவெண்ணெய்நல்லூர்: மதுரையில் விபசாரத்தில் ஈடுபடுத்த பெண்களை அழைத்துச்சென்ற புரோக்கர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். டாடா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்ரோட்டில் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்ஹிந்த்தேவி, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று காலை 6 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து வந்த டாடா சுமோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டு விசாரித்தனர். அந்த காரில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் இருந்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த குமரவேல்.40, சென்னை சைதாபேட்டை கொளஞ்சி,24, ஆரம்பாக்கம் சீனிக்குமாரி,27, மாரியம்மாள்,20, முத்துலட்சுமி,23, ஆகியோர் என்பது தெரிய வந்தது. குமரவேல் விபசார புரோக்கர் என்பதும், அவர் மூலம் மூன்று பெண்களையும் மதுரைக்கு விபசாரத்தில் ஈடுபடுத்த அழைத்து சென்றதும் தெரியவந்தது. குமரவேல், கொளஞ்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். டாடா சுமோ பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பெண்களையும் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.