சென்னை: சென்னை, சேலையூரில் உள்ள அகோபில மடத்தில், தங்க சிலைகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்கள், மாயமானது குறித்து அளித்த புகாரை, பதிவு செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த, கே.வி.ரமணி என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை, சேலையூரில் உள்ள அகோபில மடத்துக்கு, கடந்த, 20 ஆண்டுகளில், 30 கோடி ரூபாய் வரை, நன்கொடை வழங்கியுள்ளேன். அகோபில மடத்தில், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், தங்கத்திலான கருட சிலைகள் திருடு போனது குறித்தும், புகார் அளித்தேன். இவைகள் கோடிக்கணக்கில் மதிப்புடையவை. திருடு போன பொருட்கள் குறித்து, மடத்தில் உள்ள நிர்வாகிகளிடம் விசாரித்தேன். தகவல்களை தர, அவர்கள் மறுத்து விட்டனர். தங்க மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, தங்க கருட சிலைகளை பற்றியும், தகவல் தெரிவிக்கவில்லை. தங்க மண்டபத்தை, நன்கொடையாக நான் அளித்திருந்தேன். பொருட்கள் காணாமல் போனது குறித்து, கடந்த ஆண்டு, நவம்பரில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது புகாரை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க, சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜெ.ரமேஷ் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்க, அரசு வழக்கறிஞர் "நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார். விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி ஆறுமுகசாமி தள்ளிவைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.