சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவதூறு வழக்கை, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், வெளியான, "ஆனந்த விகடன்' இதழில், அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி, கட்டுரை வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "முரசொலி' பத்திரிகையில், கேள்வி-பதிலில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தற்போதைய அமைச்சர்கள் பலர், கருணாநிதி மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வத்துக்கு எதிராக, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சார்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், தாக்கல் செய்துள்ள மனுவில், "அவதூறு செய்யும் விதத்தில், இந்தச் செய்தி உள்ளது. இது பொய்யானது. அரசின் நற்பெயருக்கு, களங்கம் கற்பிக்கும் விதத்தில், இது உள்ளது. எனவே, கருணாநிதி, செல்வம், இருவரையும், அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.