மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில், வாடிவாசல் பின்புறம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை குலமங்கலம் மணிகண்டன் தாக்கல் செய்த மனு: ஜல்லிக்கட்டு நடக்கும்போது, வாடிவாசல் முன்பகுதியில் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கின்றனர். வாடிவாசல் பின் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. வாடிவாசல் பின்புறம் மனிதர்களும், காளைகளும் வாடிவாசலுக்குள் நுழைய ஏற்படும் போட்டியால், காயம் ஏற்படுகிறது. அலங்காநல்லூரில் 2012 ஜன.,16 ல் ஜல்லிக்கட்டு நடந்தது. ஒருநாள் முன்புதான், அதிகாரிகள் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்தனர். பலமணிநேரம், காத்திருக்க வேண்டியுள்ளது. காளைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுகின்றன. வாடிவாசலில், காளைகளை வரிசையில் நிறுத்த, பரிசோதிக்க, பாதுகாக்க முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும். வாடிவாசல் பின்புறம் காளைகளுக்கு டோக்கன் வழங்கி, வரிசைப்படி அவிழ்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பி.நடராஜன் ஆஜரானார். நீதிபதிகள், "மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில், வாடிவாசல் பின்புறம் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட விழாக்குழுவினர் நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே ஐகோர்ட் விதித்த 12 வழிகாட்டுதல் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.