விழுப்புரம்: அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிப்., 12ம் தேதி, விழுப்புரம் கோர்ட்டில், ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. விழாவில், முதல்வரை அவதூறாக பேசியதாக, அரசு தரப்பில் விஜயகாந்த் மீது, அவதூறு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கடந்த, 13ம் தேதி விஜயகாந்த் மீதான புகார் மனுவை, மாவட்ட அரசு வழக்கறிஞர், பொன்சிவா தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஆவடி தியாகராஜமூர்த்தி, நேற்று, விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில், விஜயகாந்த் நேரில் ஆஜராவதற்கு தடை உத்தரவு கேட்டு, சென்னை ஐகோட்ர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு குறித்து, இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கின் விசாரணை, நேற்று நடந்தது. தடை உத்தரவு கோரிய வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இவ்வழக்கு தொடர்பாக விஜயகாந்த், பிப்., 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, மாவட்ட அமர்வு நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.