Vijayakanth case postponed | விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு ஜன., 23 க்கு ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு ஜன., 23 க்கு ஒத்திவைப்பு

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, திண்டுக்கல் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, ஜன., 23 க்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த, 2012 ஆக., 1ல், தே.மு.தி.க., பொதுக்கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. இதில், பேசிய விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, அரசு வக்கீல் ஜெயபாலன், திண்டுக்கல் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுந்தரக்குமார், ஜன. 9 ல், விஜயகாந்த் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். தே.மு.தி.க., வழக்கறிஞர்கள் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனுவில், "விஜயகாந்த் மீதுள்ள அவதூறு வழக்கில், பல மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் நேரில் ஆஜராக இரண்டு வார காலத்திற்கு அவகாசம் வேண்டும்' என, கேட்டனர். இதையடுத்து நீதிபதி பாலசுந்தரக்குமார் வழக்கு விசாரணையை, ஜன., 23 க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை