John pandian presence in court | ஜான்பாண்டியன் கோர்ட்டில் ஆஜர் : வெளிநாடு செல்ல அபிடவிட் தாக்கல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜான்பாண்டியன் கோர்ட்டில் ஆஜர் : வெளிநாடு செல்ல அபிடவிட் தாக்கல்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர், ஜான் பாண்டியன், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி, வெளிநாடு செல்வதற்கு அபிடவிட் தாக்கல் செய்தார். ஜான்பாண்டியன், வரும் ஜன., 14 முதல் ஜன., 20 வரை, இலங்கைக்கும், பிப்., 8 முதல் பிப்., 21 வரை, தாய்லாந்திற்கும் செல்வதற்கு விசா கேட்டுள்ளார். இவர் மீது, வழக்குகள் நிலுவையில் உள்ளதால், கோர்ட் அனுமதி பெற்று வருமாறு, பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், ஜான்பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், கடந்த, 1993 ம் ஆண்டு, சிலை வைப்பதற்கு முயற்சித்த போது, போலீசார் தடியடி நடத்திய வழக்கு மட்டும், திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் நடப்பதாகவும், வெளிநாடு செல்லும் போது, வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும், கேட்டு இருந்தார். சென்னை ஐகோர்ட், திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜராகி, வெளிநாடு செல்வது குறித்து, ஒரு அபிடவிட் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. ஜான் பாண்டியன் நேற்று, மாஜிஸ்திரேட் சந்தான கிருஷ்ணசாமி முன் ஆஜராகி, வக்கீல் ரமேஷ் மூலம், அபிடவிட் தாக்கல் செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை