கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, குற்றப் பத்திரிகை நகல் நேற்று வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக, புகார் எழுந்தது. 2011 அக்., 3ம் தேதி, பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், பன்னீர்செல்வம், அவர் மனைவி செந்தமிழ்ச் செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது, 13ம் தேதி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, ஆக., 2ம் தேதி, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஆஜராயினர். நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்ட இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம், அவர் மனைவி செந்தமிழ்ச் செல்வி, மகன் கதிரவன் ஆகியோர், நேற்று காலை, 10:30 மணிக்கு மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜராயினர். வழக்குத் தொடர்பான, 2,383 பக்கங்கள் கொண்ட, 113 ஆவணங்களின் குற்றப் பத்திரிகை நகல்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டன. வழக்கை வரும், 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி கீதாஞ்சலி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.