மதுரை: பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என தூத்துக்குடி ஜே.எம்.,கோர்ட் நிர்பந்தம் செய்ததாக தாக்கலான வழக்கை, செஷன்ஸ் கோர்ட் விசாரணைக்கு ஏற்றிருக்கக்கூடாது. இது, ஒரு நீதிபதி, மற்றொரு நீதிபதி மீதான குற்றச்சாட்டை அங்கீகரிப்போதுபோல் உள்ளது. இது, ஒரு தவறான முன்னுதாரணம். ஜே.எம்.,கோர்ட் உத்தரவை ரத்து செய்த செஷன்ஸ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஜே.எம்.,கோர்ட் உத்தரவுப்படி, பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி தூத்துக்குடி பகுதியை சேர்ந்த வாசுகி. பிரிந்து வாழும் இவர், பராமரிப்புத்தொகை வழங்க கணவருக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ( ஜே.எம்.,) கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பின், இருதரப்பும் சமாதான "மெமோ' தாக்கல் செய்தனர். மனைவிக்கு, மாதம் 3000 ரூ பாய் பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தூத்துக்குடி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், ராஜா சீராய்வு மனு தாக்கல் செய்தார். அவர்,"குறுக்கு விசாரணையில், நான் 3000 ரூபாய் பராமரிப்புத்தொகை வழங்க சம்மதிக்கவில்லை. சம்மதிக்காவிடில், வேலையை இழக்க நேரிடும் என மாஜிஸ்திரேட் நிர்பந்தம் செய்ததால், ஒத்துக்கொண்டேன். ஜே.எம்.,கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என குறிப்பிட்டார்.
நீதிபதி,"மனுதாரருக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இடைக்காலமாக, மனைவிக்கு 1500 ரூபாய் பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராஜா ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி டி.சுதந்திரம்: ஜே.எம்.,கோர்ட்டில் சமாதான ஒப்பந்தத்தில் மனுதாரரும், அவரது வக்கீலும் கையொப்பமிட்டுள்ளனர். வக்கீல் ஆஜராகியிருந்தபோது, மாஜிஸ்திரேட் எப்படி மனுதாரரை நிர்பந்திக்க முடியும்?
மாஜிஸ்திரேட் நிர்பந்தித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. இதை, இக்கோர்ட் பொறுத்துக்கொள்ளாது. மனுவை, செஷன்ஸ் கோர்ட் விசாரணைக்கே ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. நிர்பந்தம் நடந்ததா? என ஜே.எம்., கோர்ட்டில், அறிக்கை கோரியிருக்க வேண்டும். இது, ஒரு நீதிபதி, மற்றொரு நீதிபதி மீதான குற்றச்சாட்டை அங்கீகரிப்போதுபோல் உள்ளது. இது, ஒரு தவறான முன்னுதாரணம். ஜே.எம்.,கோர்ட் உத்தரவை ரத்து செய்த செஷன்ஸ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.