HC orders to give compensation | லாரி மோதி டாக்டர் பலி ரூ.19.55 லட்சம் இழப்பீடு : ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி டாக்டர் பலி ரூ.19.55 லட்சம் இழப்பீடு : ஐகோர்ட் உத்தரவு

Added : ஜன 10, 2013
Advertisement

மதுரை: தஞ்சாவூர் டாக்டர் காரில் சென்றபோது, லாரி மோதி பலியானதற்கு 19 லட்சத்து 54 ஆயிரத்து 754 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர் கோபிநாதன். இவர், 2004 ஆக.,29 ல் காரில் சென்றபோது, நாமக்கல்லை சேர்ந்த டேங்கர் லாரி மோதி பலியானார். இழப்பீடு கோரி, கோபிநாதன் மனைவி சுமங்கலா, தஞ்சாவூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
தீர்ப்பாயம், "கோபிநாதன் மற்றும் நாமக்கல் டேங்கர் லாரி டிரைவர் ராஜ்குமார் கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு கோபிநாதன் 40 சதவீதம் காரணமாகிறார். மொத்தம் 19 லட்சத்து 8 ஆயிரத்து 764 ரூபாய் இழப்பீடு வழங்க தகுதி உள்ளது. மனுதாரருக்கு 60 சதவீதம் அதாவது 11 லட்சத்து 92 ஆயிரத்து 250 ரூபாய், நாமக்கல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சுமங்கலா, " லாரி டிரைவர் சைகை காண்பித்தபின்னரே, கடக்க கோபிநாதன் முயன்றுள்ளார். அப்போது, லாரி மோதியுள்ளது. இன்சூரன்ஸ் கம்பெனி லாரி டிரைவரிடம் விசாரிக்கவில்லை. கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில், "கோபிநாதனுடன் காரில், ராஜசேகரன் என்பவர் பயணம் செய்துள்ளார். அவர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த எப்.ஐ.ஆர்.,நகலை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கவில்லை. தீர்ப்பாய உத்தரவு சரியே,' என வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி: தீர்ப்பாயம் எப்.ஐ.ஆர்.,பற்றி குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த நகலை சமர்ப்பிக்கவில்லை. ராஜசேகரன் புகாரில், கோபிநாதன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜசேகரன் புகாரில் உள்ளபடி அல்லாமல், போலீசாரின் விருப்பப்படி எப்.ஐ.ஆர்.,பதிவு செய்துள்ளனர். கோபிநாதனுக்கு பின், ராஜசேகரனும் இறந்துவிட்டார்.

கவனக்குறைவால் விபத்து நடந்ததா? என எப்.ஐ.ஆரில் குறிப்பிட வேண்டும். எப்.ஐ.ஆர்.,நகல் இன்றி தீர்ப்பாயம் முடிவு செய்ய முடியாது. இவ்வழக்கில் எப்.ஐ.ஆர்., மற்றும் இறுதி அறிக்கை இல்லை; சாட்சி உள்ளது. சாட்சிப்படி, வழக்கை முடிவு செய்ய வேண்டியுள்ளது. சாட்சிப்படி, மேம்பாலத்தில் டேங்கர்லாரி சென்றுள்ளது. அதன் பின்னால், கோபிநாதன் காரை ஓட்டிச்சென்றுள்ளார். லாரி டிரைவர் சைகை காட்டியதால், லாரியை கடந்து செல்ல கோபிநாதன் முயன்றுள்ளார். அப்போது லாரி மோதியதில், பாலத்திலிருந்து கார் தூக்கி வீசப்பட்டுள்ளது. விபத்திற்கு லாரி டிரைவர்தான் காரணம். மனுதாரர் குடும்பத்திற்கு 19 லட்சத்து 54 ஆயிரத்து 754 ரூபாய் 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை