விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இளம் பெண் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குணமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகள் சுகந்தி, 23. இவர் கடந்த 24ம் தேதி இரவு தனது காதலன் மன்னம்பாடி பாக்கியராஜ் என்பவருடன், மணிமுக்தாற்றில் பேசிக் கொண்டிருந்தபோது, மர்ம கும்பல், பாக்கியராஜை கட்டிப்போட்டு, சுகந்தியை கற்பழித்தனர். விருத்தாசலம் போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து, ராமச்சந்திரன்பேட்டை முத்து, 22, சக்தி (எ) சுடலை, 22, ராஜசேகர், 22, பழமலைநாதர் நகர் அமல்ராஜ் (எ) அந்தோணி, 21, ஏழுமலை, 18, நாச்சியார்பேட்டை வெட்டு சங்கர் (எ) சங்கர், 26, காயிதேமில்லத் தெரு தர்மா (எ) தர்மதுரை, 22, ஆகியோரை கைது செய்தனர். அதில், ஏழுமலை, பண்ருட்டி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்றவர்கள் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையில், திட்டக்குடி மாஜிஸ்திரேட் ஸ்ரீராம் முன்னிலையில், குற்றவாளிகளை கண்டறிய அடையாள அணிவகுப்பு நடந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கு நேற்றுடன் காவல் முடிந்ததால், அனைவரும் விருத்தாசலம் மாஜிஸ்திரேட் முகமது ரிஸ்வானுல்லா ஷெரீப் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.எஸ்.பி., ராதிகா பரிந்துரையின் பேரில் கலெக்டர் கிர்லோஷ்குமார், முக்கிய குற்றவாளிகளான முத்து, 22, சக்தி (எ) சுடலை, 22, ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் நேற்று குற்றவாளிகளிடம் வழங்கப்பட்டது.
மலேசியாவுக்கு தப்பி ஓட்டம் : தலைமறைவாக உள்ள வண்டிப்பாளையம் முருகன், புதுச்சேரி சதீஷ் (எ) பாய்சன் சதீஷ், விருத்தாசலம் பாலாஜி, சுகந்த் ஆகியோரைப் பிடிக்க டி.எஸ்.பி., வெங்கடேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை, சப் இன்ஸ்பெக்டர்கள் திருமணி, பாண்டியன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் சுகந்த், கற்பழிப்பு நடந்த அடுத்த நாளே மலேசியா சென்று விட்டதால், அவரை கைது செய்து கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.