Advertisement
நடுரோட்டில் கவிழ்ந்தது 108 ஆம்புலன்ஸ் : நோயாளி உட்பட நால்வர் படுகாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, நோயாளியை ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், திடீரென டயர் வெடித்து, நடுரோட்டில் கவிழ்ந்ததில், நால்வர் படுகாயமடைந்தனர். கோவில்பட்டி, முக்கூட்டுமலையைச் சேர்ந்தவர் மாரிச்சாமி, 27. இவரது மனைவி அய்யம்மாள், 22; நேற்று முன்தினம், இவர், வீட்டில், ஸ்டவ் அடுப்பில், காபி போட்டபோது, தீக்காயமடைந்தார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அய்யம்மாள், மேல்சிகிச்சைக்காக, நேற்று, அங்கிருந்து, 108 ஆம்புலன்சில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

நடுரோட்டில் கவிழ்ந்தது: மாலை 3:45 மணியளவில், ஆம்புலன்ஸ், குறுக்குச்சாலை - குளத்தூர் சந்திப்பு ரோட்டில் வந்தபோது, அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. அதனால், நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ், நான்கு வழிச்சாலை, நடுவிலுள்ள, தடுப்புச்சுவரில் மோதியது. அப்போது, பின்பக்க டயரும் வெடித்ததால், நடுரோட்டில் கவிழ்ந்தது. இவ்விபத்தில், ஏற்கனவே, தீக்காயத்துடன் இருந்த அய்யம்மாள் மற்றும் அவரது கணவர் மாரிச்சாமி, ஆம்புலன்ஸ் டிரைவர் தேனி செல்வம், மருத்துவ உதவியாளர் குளத்தூர் பாலமுருகன் ஆகிய நால்வர், படுகாயமடைந்தனர். அவர்கள், இரு ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் மோதியதில், ரோட்டோர மின் கம்பமும் சேதமடைந்தது. ஒட்டப்பிடாரம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.