Advertisement
பராபட்சமான மின்சப்ளை: தொழிற்சாலைகள் மூடல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,01:18 IST

மதுரை: தமிழகத்தில் பராபட்சமான மின்சப்ளையை கண்டித்து தொழில், வணிகர்கள் நேற்று கதவடைப்பு செய்ய அழைப்பு விடுத்திருந்தனர். மதுரையில் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மதியத்திற்கு பின், கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் மட்டும் இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளில் 10 மணி நேரமும் மின்தடை செய்யப்படுவதை கண்டித்து நேற்று ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த தொழில், வணிகர்கள் முடிவு செய்தனர். மதுரையில் நேற்றுகாலை 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்டிக்கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. மதியத்திற்கு பின், அனைத்து கடைகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. இதனால் பாதிப்பு இல்லை. ஆனால் சிறுதொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கப்பலூர், உறங்கான்பட்டி, கே.புதூர் தொழிற்பேட்டைகளில் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேலு, மடீட்சியா தலைவர் மணிமாறன், செயலாளர் சேர்மபாண்டியன் உட்பட பலர் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மின்வாரிய தலைமை பொறியாளர் சுந்தர்ராமனிடம் மனு கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் 25 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளில் அதிக நேரம் மின்தடை செய்யவும் அனுமதி கோரி மின்வாரியம், ஒழுங்குமுறை
ஆணையத்தில் மனு செய்துள்ளதை வாபஸ் பெற அரசு அறிவுறுத்த வேண்டும். கிடைக்கும் மின்சாரத்தை அனைத்து பகுதிகளுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கும்படி மனுவில் கோரப்பட்டது, என்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.