மதுரை: ""தமிழகத்தில் ஏற்கனவே பல கட்டண உயர்வுகளால் மக்கள் பாதித்து வரும்
சூழ்நிலையில், மத்திய அரசின், ரயில் கட்டண உயர்வு, அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்,'' என பயணிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு, ரயில் கட்டணத்தை வரும் ஜன., 21 முதல் உயர்த்தியுள்ளது. இது குறித்து மதுரை ரயில்
நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூறியதாவது:
டேனியல் மனோகரன் (மதுரை): கட்டண உயர்வு, நடுத்தர மக்களை பாதிக்கும். ஏற்கனவே பஸ் கட்டணம், பால் விலை மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ரயில் கட்டண உயர்வு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இரண்டாம் வகுப்பு "சிலீப்பர்' "கிளாசில்' கி.மீ.,க்கு 6 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் தான், இந்த கட்டண உயர்வு என்று, மத்திய அரசு கூறினாலும், தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். ரயிலில் எலிகள் தொந்தரவு, "ஏசி' வகுப்பில் கரப்பான் பூச்சி தொந்தரவால் மக்கள் தூக்கத்தை இழக்கின்றனர். பெட்ஷீட், தலையணை சுகாதாரமாக இல்லை.இந்நிலையில், கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல. இது வணிகர்கள் உட்பட நடுத்தர வகுப்பை சேர்ந்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
வெங்கடாசலம் (சென்னை): தற்போதுள்ள விலைவாசியை ஒப்பிட்டால், மத்திய அரசு உயர்த்தியுள்ள, இந்த கட்டணம், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, ரயிலில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பு கட்டணம் உயர்வை, ஒரு கி.மீ.,க்கு 6 பைசா என்பதற்கு பதில், 3 பைசா என்று உயர்த்தியிருக்கலாம், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.