மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் "கிளார்க்'குகள் உட்பட 211 பணியிடங்கள் நியமனம் செய்வதில், உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று, பல்கலையில் நேற்று நடந்த "சிண்டிகேட்' கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
துணைவேந்தர் கல்யாணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பதிவாளர் (பொறுப்பு) பிச்சுமணி, உறுப்பினர்கள் கண்ணன், முரளிபக்ஷி ராஜன், சாராதாம்பாள், செல்வக்குமார், சரஸ்வதி பங்கேற்றனர். பல்கலையில் பல்வேறு கட்டடப் பணிகளை மேற்கொள்ளவும், தேவையான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து திட்டமிடல் பணிகளுக்கு "கட்டட கமிட்டி' நியமிக்கப்பட்டது. பல்கலையில் 176 கிளார்க்குகள் உட்பட 211 பணியிடங்களை நிரப்புவதில், உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இதில், 51 பணியிடங்கள் "பேக்லாக்' (பின்னடைவு காலியிடங்கள்) அடிப்படையில் நிரப்பப்படும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.