மதுரை: மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., மண்டலத்தலைவர் வெளிநடப்பு செய்தார். மேஜையை தட்டி, அவரது முடிவை தி.மு.க., வினர் வரவேற்றனர். நேற்று நடந்த மாநகராட்சி
கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் மண்டலம் 1ன் தலைவர் ராஜபாண்டி பேசியதாவது: குளிர் அதிகமாக உள்ளதால், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் நாங்கள் முறையிடுவதில், 90 சதவீதம் நடப்பதில்லை.
"மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற திட்டத்தை கொண்டு வந்தனர்; அதனால் எந்த பயனும் இல்லை. மண்டலம் 2ல், உதவிப்பொறியாளர்கள் உள்ளிட்டோரை "சஸ்பென்ட்' செய்தீர்கள்; மீண்டும் அவர்களை பணியில் சேர்த்தீர்கள். நடந்த விபரத்தை கடைசி வரை மன்றத்தில் தெரிவிக்கவில்லை. மேயர் பொறுப்பேற்கும் முன், "கடந்த 15 ஆண்டுகால தி.மு.க., ஊழலை வெளிக்கொண்டு வருவேன்,' என்றார். அவர் கூறிய, எதுவும் நடக்கவில்லை. இறந்தவருக்கு ஜாதகம் பார்க்கும் பணியைத் தான், மண்டலத் தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறோம். "அதிகாரம் இல்லை, மரியாதை இல்லை, எதுவும் நடப்பதில்லை என்பதால், வெளிநடப்பு செய்கிறேன், என்று கூறி, வெளியேறினார். சபையிலிருந்து வெளியேறி போது, அவருக்கு ஆதரவாக, தி.மு.க., கவுன்சிலர்கள் மேஜையை தட்டினர். பின் விவாதம் ஒன்றுக்கு பதிலளித்து பேசிய மேயர் ராஜன்செல்லப்பா, ""மண்டலம் 1ன்தலைவர் வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அவர் நடவடிக்கை குறித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும். எனவே அவரை ஒப்பிட்டு யாரும் பேச வேண்டாம்,'' என்றார்.
அ.தி.மு.க., நிர்வாகத்தை கண்டித்து, அக்கட்சியின் மண்டலத்தலைவரே வெளிநடப்பு செய்த விவகாரம், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.