அலங்காநல்லூர்: ""அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேரூராட்சி சார்பில் நடக்கவிருப்பதால் பார்வையாளர் கட்டணமில்லை,'' என, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்து உள்ளார். இங்கு ஜன.,16ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு பணியினை ஆய்வு செய்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, ""பேரூராட்சி நிர்வாகத்திடம் காலரி கட்டணம் வசூலிக்கக்
கூடாது; முக்கிய இடங்களில் மெகா திரை மூலம் ஜல்லிக்கட்டு பார்க்க வழி செய்யப்படும்,'' என்றார்.
"டுபாக்கூர்களுக்கு' சிக்கல்: நிர்வாக அதிகாரிகள் பாலமுருகன், குணாளன் கூறியதாவது: பார்வையாளர் காலரி, முக்கிய பிரமுகர்கள் காலரி, சுற்றுலாத்துறையினர் காலரி உட்பட அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் இளைஞர் படையினர் இருப்பர். மேலும், பத்திரிக்கையாளர்கள், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள், நிர்வாக அதிகாரி மற்றும் விழாக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும். பலர் போலி அடையாள அட்டையுடன் வருவதால் நிறைய சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்க, கலெக்டர் அனுமதியுடன் முதன் முறையாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.