நாமக்கல்: ""நகராட்சியுடன், ஒன்பது பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வீட்டுமனைகளுக்கு அப்ரூவல் வழங்க, இதுவரை, அரசாணை எதுவும் வரவில்லை. அதனால், வங்கிக் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது,'' என, அ.தி.மு.க., கவுன்சிலர் குப்புசாமி குற்றச்சாட்டு எழுப்பினார்.
நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம், சேர்மன் கரிகாலன் தலைமையில் நடந்தது. கமிஷனர் செழியன், பொறியாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:
ஷேக் நவீத் (காங்.,): நகராட்சியில், யு.எஸ்.இ.பி., போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த திட்டம் என்ன, அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதை தெரியப்படுத்தும்படி, மூன்று கூட்டங்களில் தொடர்ந்து கேட்டு வந்துள்ளேன். எனினும், இதுவரை அதற்கான விளக்கம் அளிக்கப்படாமல் உள்ளது.
கரிகாலன் (சேர்மன்): சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்படும்.
சரவணன் (தி.மு.க.,): நகராட்சியின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, நல்லிபாளையத்தில் செயல்பட்டு வந்த கருவாடு அரவை ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. எனினும், ஒருசில ஆலைகள், சீலை உடைத்து, மீண்டும் செயல்பட்டு வருகிறது. அதுபற்றி கேட்டால், மிரட்டல் தோனியில், கருவாடு அரவை உரிமையாளர்கள் பேசுகின்றனர்.
செழியன் (கமிஷனர்): கருவாடு அரவை ஆலைகளுக்கு வைக்கப்பட்ட, "சீல்' உடைக்கவில்லை. அதே நேரத்தில், கருவாடு ஆலை செயல்பட அனுமதியும் அளிக்கவில்லை. கருவாடு அரவை ஆலைகள் திறந்திருந்தால், அதன் மீது கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீதர் (அ.தி.மு.க.,): நகராட்சி, 34வது வார்டில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், சாக்கடை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிக்கான டெண்டரும் விடப்பட்டது. எனினும், அந்த பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.
சேர்மன்: எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் சாக்கடை அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணி மேற்கொள்ள டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர், பணி செய்யாமல் காலதாமதம் செய்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு டெண்டர் அறிவித்து, பணி மேற்கொள்ளப்படும்.
குப்புசாமி (அ.தி.மு.க.,): நகராட்சியுடன், ஒன்பது பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வீட்டுமனைகளுக்கு அப்ரூவல் வழங்க, இதுவரை, அரசாணை எதுவும் வரவில்லை. ஃபிளாட் (வீட்டுமனை) அப்ரூவல் இல்லாததால், வங்கிக் கடன் பெற முடியாத நிலை உள்ளது.
சேர்மன்: உள்ளாட்சித் துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைந்து அப்ரூவல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
லியாகத் அலி (அ.தி.மு.க.,): நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளால், பயணிகள் நிற்பதற்கு இடமில்லை. குறிப்பாக, திருச்சி, ஈரோடு பஸ்கள் நிற்கும் பகுதியில், ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.
சேர்மன்: நகராட்சி அதிகாரிகள் மூலம் அங்குள்ள கடை ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதையடுத்து, 55 தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.