வேதாரண்யம்: கடற்கரை பகுதியில் பலத்த மழையால், 10 கிராமங்களைச் சேர்ந்த, ஐயாயிரம் வேதை பகுதி மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடந்தனர். இதனால், மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால், தமிழக கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், பலத்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவிலுள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வானவன்மகாதேவி உள்பட, 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 5,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
தங்களுக்கு சொந்தமான பைபர், விசைப் படகுகள், கட்டுமரங்கள் ஆகியவற்றை, ஆங்காங்கே கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இதனால், மீன்பிடித்தொழில் அடியோடு பாதித்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் காலை முதல், வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பலத்த காற்று வீசியது. மாலை, ஆறு மணிக்கு துவங்கிய மழை இரவு, 9 மணிக்கு பலத்த மழையாக மாறியது. இதனால், தென்னடார், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, கரியாப்பட்டணம் விவசாயிகள், நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் எனும் நம்பிக்கையில் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்றுக்காலை எட்டு மணி வரை மழை நிலவரம்: அதிகபட்சமாக வேதாரண்யத்தில், 173.8 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. தலைஞாயிறு, 39.6 மி.மீ., திருபூண்டி, 22 மி.மீ., நாகையில், 12.1 மி.மீட்டரும் பதிவானது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, மணல்மேடு, கொள்ளிடம் ஆகிய இடங்களில், மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.