கரூர்: அரசு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் ஹோட்டல்களில், போலி மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக, "குடி'மகன்கள் தரப்பிலிருந்து, புகார் எழுந்துள்ளது. இதனால், "கரூர் மாவட்டத்தில் மீண்டும் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு ஆலை செயல்படுகிறதா?' என, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தோகமலை அருகே, கடந்தாண்டு மார்ச், 7ம் தேதி சின்ன ரெட்டிப்பட்டியில், 768 போலி மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். 10ம் தேதி கரூர் தாந்தோணி கிரேப் கார்டன் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து, போலி மதுபானம் தயாரிக்கப் பயன்படும் "சீல்' வைக்கும் இயந்திரம், 16 கேன்களில் ஸ்பிரிட் (எரிசாராயம்), 1, 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, 12ம் தேதி செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள பழைய சாயப்பட்டறை ஒன்றில் போலி மதுபான பாட்டில்க ள், காலி பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். 16ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு சென்னை அடுத்த மதுரவாயல் வானரகம் பகுதியில் டெம்போ டிராவலர் வேனில், 80 அட்டை பெட்டிகளில், 180 மில்லி கொண்ட, 3,480 பாட்டில்கள், தமிழக அரசின் ஆ யத்தீர்வை போலி லேபிள்களும் கைப்பற்றப்பட்டது. சென்னையி ல் கைப்பற்ற மதுபாட்டில்களு ம், கரூரில் இருந்து கடத்தப்பட்டவை, என, போலீஸார் நடத்தி ய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலி மது பாட்டில்கள் தயாரிப்பு மையாக விளங்கிய, கரூரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., அண்ணாதுரை விசாரணை நடத்தி விட்டு சென்றார். இதையடுத்து, கரூர் மாவட்டத்தில், சில மாதங்களாக போலி மது பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த புகார்கள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது கரூரில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களில், கடந்த சில நாட்களாக போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், அதை குடித்தால் போதை ஏறுவதில்லை எனவும், உடல்நலம் பாதிக்கப் படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனால், கடந்த, 6ம் தேதி இரவு கரூரில் சில ஹோட்டல்களில் மது விற்பனை நடக்கிறதா? என, போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணைக்கு பிறகும், கரூரில் உள்ள சில ஹோட்டல்களில் அனுமதி இல்லாமல், தொடர்ந்து மது விற்பனை அதிகாலை வரை நடந்து வருகிறது. ஹோட்டல்களுக்கு, டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களும், அரசு மதுபான கடை பாரில், உதவியாளர்கள் வாங்கி வரும் மது பாட்டில்களும் பெரும்பாலும் போலி மது பாட்டில்கள் என தெரிகிறது.
இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ""கரூரில் உள்ள டாஸ்ம õக் கடை மற்றும் ஹோட்டல்களி ல் விற்பனை செய்யப்படும், பெ ரும்பாலான குவார்ட்டர் பாட்டி ல்கள் போலியாக உள்ளது. அதை குடித்தால், போதை ஏறுவதில்லை. மாறாக வயிறு மற்றும் நெஞ்சு எரிகிறது. மது பாட்டில்கள் தரம் குறித்து, பார் சப்ளையர்களிடம் கேட்டால், தகாத வார்தைகளால் திட்டி அடித்து, உதைத்து விரட்டுகின்றனர்,'' என்றனர்.
மீண்டும் போலி ஆலை?: கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், பார் உதவியாளர்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே, நாள்தோறும் சரக்கு சரியில்லை, போலி மதுவா ? என தகராறு ஏற்படுகிறது. குடிமகன்களின் புகார் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் மீண்டும் போலி மதுபான ஆலை ரகசியமாக செயல்படுகிறதா?, என, போலீஸார் தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் போலி மதுபானங்கள் தயாரிப்பது உலகறிந்த விஷயம் என்றும், குடிமகன்கள் கூறுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.