பெரம்பலூர்: காணாமல் போன குழந்தையின் உடல், நேற்று மாலை, அவரது தாயும், பாட்டியும் இறந்து கிடந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
பெரம்பலூர் ரெங்கா நகர் பகுதியைச் சேர்ந்த உசேன் மனைவி மைமோன்பீ, 32, உசேன் சவுதிஅரேபியாவில் உள்ளதால், மைமோன்பீ தனது குழந்தையுடன் ரெங்கா நகரில் வசித்து வந்தார். இவர் கடந்த, 7ம் தேதி தனது மகள் சாயினாபானு, தனது அம்மா ஆயிஷாகனி, 53, ஆகியோருடன், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூரில் உள்ள தனது மாமியார் மதர்ஸாவை பார்த்துவிட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார்.
ஆனால் இரவு, 10 மணியாகியும், மூவரும் வீடு திரும்பவில்லை. மைமோன்பீ மொஃபைலும் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த இவரது உறவினர்கள் பெரம்பலூர் போலீஸில் மைமோன்பீ, ஆயிஷாகனி, சாயினாபானு ஆகியோரை காணவில்லை என புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில் போலீஸார் தேடி வந்த நிலையில், கடந்த, 8ம் தேதி பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்திலிருந்து, மேலப்புலியூர் செல்லும் சாலையில் உள்ள பஞ்சாயத்து குடிநீர் கிணற்றில், மைமோன்பீ மற்றும் ஆயிஷாகனி ஆகியோரது உடல் கிடந்தது.
உடல்களை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் வைத்து தண்ணீர் இரைத்தும் தண்ணீர் அளவு குறையாததால், குழந்தையின் நிலைக்குறித்து போலீஸாரால் அறியமுடியவில்லை. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து மைமோன்பீயின், இரண்டரை வயது குழந்தையான சாயினாபானுவை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, 5 மணியளவில் மைமோன்பீ மற்றும் ஆயிஷாகனி இறந்து கிடந்த அதே கிணற்றில், குழந்தை சாயினாபானு உடல் மிதப்பதாக பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் வந்ததையடுத்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சர்புதீன் தலைமையிலான போலீஸார் கிணற்றில் மிதந்த சாயினாபானு பிணத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் மிதந்த, மூவரின் உடலும் மீட்கப்பட்டதை தொடர்ந்து, போலீஸார் இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.