வாழப்பாடி: வாழப்பாடி அருகே, இரு பைக்குகள் மோதி கொண்ட விபத்தில், வாலிபர் பரிதாபமாக பலியானார்.
சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த, கூட்டாத்துப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சதீஸ், 28. கடந்த, 6ம் தேதி மாலை, கூட்டாத்துப்பட்டியில் இருந்து ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் அவர், பேளூர் நோக்கி சென்றார்.
வாழப்பாடி அடுத்த, அத்தனூர்பட்டி கருப்பனார் கோவில் அருகே சென்ற போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம், 47 என்பவரது பைக் மீது, அவரது பைக் மோதியுள்ளது. அந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஸ், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக பலியாõனர். அந்த விபத்தில் படுகாயமடைந்த வேலாயுதம், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.