தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில், சம்பா பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மூன்று நாட்களாக நடத்திய முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பேரிடர் பாதித்த மாநிலமாக, தமிழகத்தை அறிவிக்க வேண்டும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 7ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தில், மா.கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து, தஞ்சை மற்றும் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக, நேற்று மதியம், விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை, காந்திஜி ரோட்டில் விவசாயிகள், திடீரென மறியலில் ஈடுபட்டனர். மாலை, ஆறு மணி வரை நடந்த மறியல் போராட்டத்தால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
* திருவாரூரில், இரண்டு நாட்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று பகல், 12 மணிக்கு மேல் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சாவூர், மன்னார்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர், நிவாரணம் குறித்து சாதகமான முடிவை அறிவித்தால்தான் போராட்டத்தை கைவிடுவதாக, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், "டெல்டா விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்கப்படும்' என்று கோடநாட்டில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதையடுத்து, மூன்று போராட்டத்தை விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் விலக்கிக் கொண்டனர்.
அரசு உரிய நிவாரணம் வழங்கா விட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகளும், விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.