கும்பகோணம்: கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற, இரு மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி சாட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. அவரது மகள் ராணி, 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கும்பகோணத்தில் பாலக்கரை அருகே தங்கியிருந்து, இங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவியை, கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருபவரும், காட்டுமன்னார்குடி நெய்வாசல் கிணற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜதுரை, 19, காட்டு மன்னார்குடி கொத்தவாசல் பரிவளாகம் எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த சதாசிவம் மகனும், சிதம்பரம் கல்லூரியில் படித்துவரும் விஜய தர்மசீலனும், 19, ஆகிய இருவரும், கும்பகோணத்திலிருந்து கடத்திசென்றுவிட்டதாக, அம்மாணவியின் தந்தை வீரமணி கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீஸார் கடந்த மாதம், 20ம்தேதி வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று போலீஸார், தஞ்சாவூருக்கு சென்று மாணவியை மீட்டு, அவரை கடத்தியதாக ராஜதுரையையும், விஜயதர்மசீலனையும் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.