பெரம்பலூர்: குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின், ஒருவார கால என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவடைந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா, ஈச்சம்பட்டி கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரசிளங்கண்ணன் தலைமை வகித்தார். ஈச்சம்பட்டி அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயமேரி முன்னிலை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துசாமி, என் .எ ஸ்.எஸ்., திட்ட மாவட்ட தெ õடர்பு அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் பங்கே ற்ற மாணவர்களுக்கு, பெரம்பலூர் சி.இ.ஓ., மல்லிகா சா ன்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். கடந்த ஒரு வாரமாக நடந்த முகாமில் கோ வில் மற்றும் பள்ளி வளாக ம், மயானப்பாதை சீரமைத்த ல், மரக்கன்றுகள் நடுதல், ÷ வலி அமைத்தல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு பேரணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அன்பழகன், பாலகிருஷ்ணன், கருணாகரன், நாகராஜ் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். முகாம் உதவி அலுவலர் பிச்சைமணி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.