திருத்துறைப்பூண்டி: திருவாரூரில் கடந்த, இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தூறல் மழையால், 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் உயிர் பிழைத்து விடும் எனும் நம்பிக்கையில், விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேநேரம் தஞ்சையில் கடந்த, இரண்டு நாட்களாக மேகமூட்டம் மட்டும் காணப்பட்டதால், விவசாயிகளை ஏமாற்றமடைந்தனர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை பகுதிகளுக்கு கடந்த செப்., 17ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் குறுவை, சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி விவசாயிகள் அவதிப்பட்டனர். மேலும் மழையும் பொய்த்ததால் பயிர்கள் அனைத்தும் கருகி முழுவதும் அழிந்தது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், திருவாரூர், நாகை மாவட்டங்களில், ஆங்காங்கே நேற்று முன்தினம் மா லை முதல், தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை பனித்தூறலாகி துவங்கி, இரவில் ஓரளவு மழை பெய்தது. நேற்றும் காலை முதல், மாலை வரை தொடர்ந்து மழை தூறல் விழுந்தது. கடந்த, 10 நாட்களுக்கு பனியாக தூறிய மழையால், பயிரிடப்பட்ட கல்சர், கட்டக்கல்சர், டி.பி.டி., டி.கே.எம்., 9, ஆடுதுறை 45, 38 நெற்பயிர்கள், ஓரளவு கதிர் சூல் கட்டி வெளிவரும் நிலையை அடைந்தது.
இதையடுத்து நேற்றைய மழையால் கதிர்கள் முழுவீச்சில் வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய மழையால், திருவாரூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்ட, மூன்றரை லட்சம் ஏக்கரில், 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் மகசூல் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.
தஞ்சையில் மேகமூட்டம்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த, இரண்டு நாட்களாக காலை முதல், மாலை வரை, வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால், மழை பெய்யும் என, விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சில இடங்களில் மழை பெய்தாலும், தஞ்சை நகர பகுதி உள்பட பெரும்பாலான இடங்களில் தூறல், மேகமூட்டமே காணப்பட்டு, விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.