district news | 6 மாத சம்பளம் நிலுவையால் தொகுப்பூதிய நர்ஸ்கள் அவதி| Dinamalar

தமிழ்நாடு

6 மாத சம்பளம் நிலுவையால் தொகுப்பூதிய நர்ஸ்கள் அவதி

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தொகுப்பூதியம் பெறும் நர்ஸ்களுக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்காததால், பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் நர்ஸ்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம், ஆறு ஆயிரத்து, 800 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், 30 பேர் தொகுப்பூதிய நர்ஸ்களாக பணிபுரிகின்றனர். தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 10 பேர் இந்த பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஆறு பேர் பெண்கள். பெண் பணியாளர்களுக்கு வேறு நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஆண் தொகுப்பூதிய நர்ஸ் பணியிடத்தில் பணிபுரிவோருக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுகதாõர நிதி மற்றும் மருத்துவமனை பராமரிப்பு நிதியில் இருந்து தொகுப்பூதியம் வழங்கப்பட்டு, பின்னர் தொகுப்பூதியர்களுக்கு வரும் சம்பளம் நிதியில் இருந்து சரி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிவோருக்கு நிதி வரவில்லை என காரணம் காட்டி, ஆறு மாதமாக சம்பளம் வழங்காததால், வெளியூர்களில் இருந்து பணி செய்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சம்பளத்தை நம்பி பலர் கடன் வாங்கி, கடன் தொகையை கொடுக்க முடியாமல் வட்டி கட்டும் நிலையுள்ளது. தொகுப்பூதியர்களின் நிலை அறிந்து மாற்று நிதியில் இருந்து நிலுவை சம்பளத்தை வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொகுப்பூதிய நர்ஸ்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை