பரிதாபம்! பரிசோதனை மையங்கள் தேடி அலையும்... சேலம் மருத்துவமனையில் நோயாளிகள் அவஸ்தை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கண்காணாத இடத்தில் இயங்கும், பரிசோதனை மையங்களை தேடி அன்றாடம் நோயாளிகள், அல்லல்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரே கட்டிடத்தில், பரிசோதனை மையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 47 வகையான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாள் தோறும், 8,000 பேர் வெளிப்புற நோயாளியாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் உள்புறநோயாளியாகவும், தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர் சிகிச்சைக்கு பிறகும், நோயாளிகளுக்கு உடல்நிலை தேறாத பட்சத்தில், நோய்க்கான காரணம், நோய் தன்மை குறித்து கண்டறிய, நோயாளிகளின், ரத்தத்தை மாதிரி எடுத்து, பல்வேறு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பரிசோதனை முடிவில், நோய் தாக்குதலை கண்டறிந்து, அதற்கேற்ப, தீவிர சிகிச்சை மேற்கொண்டு, நோயாளியை குணப்படுத்தப்படும்.
அதற்காக, நோயாளிகளின் ரத்தத்தை மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்த, அதை, நோயாளி அல்லது நோயாளி உடனிருப்போர் வசம் டாக்டர்கள் ஒப்படைத்து விடுகின்றனர். அவ்வாறு, ஒப்படைக்கப்பட்ட ரத்தத்தை கையோடு எடுத்து, கொண்டு, பரிசோதனை கூடத்தை தேடி, நோயாளிகள், மணி கணக்கில் அல்லல்பட்டு வருகின்றனர்.
சர்க்கரை நோய், சிறுநீரகம், கல்லீரல், ரத்தத்தில் உள்ள நோய், மூளை தொடர்பான நோய்களை கண்டறியும், "பையோ கெமிஸ்ட்ரி லேப்' பழைய பிரசவ வார்டுக்கு அருகே, ஒதுக்கு புறமாக உள்ள, 14வது அறையில் இயங்கி வருகிறது. இந்த லேப் செயல்படும் இடத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், விளம்பரம் மற்றும் வழிக்காட்டி பலகை எதுவுமே இல்லை.
அதே போல, ரத்த சம்பந்தமான நோய், ரத்தத்தின் அளவு, ரத்தத்தின் செல் அளவு, திசு பரிசோதனை, எலும்பு மஜ்ஜை பரிசோதனை செய்யப்படும், "பெத்தாலஜி லேப்' சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதலாவது கட்டிடத்தின் தரை தளத்தில் இயங்கி வருகிறது.
இந்த பரிசோதனை செயல்படுவதற்கான அறிவிப்பு பலகையும், மருத்துவமனையில் இல்லை. ரத்தம், சிறுநீரகம், உடல் திரவத்தில் உள்ள கிருமி தொற்று, வைரஸ் உள்ளிட்டவைகளை கண்டறியும், "மைக்ரோபயாலஜி லேப்' கைதிகள் சிகிச்சை பெறும் அறை அருகில் செயல்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பு பலகையும், மருத்துவமனையில் வைக்கப்படவில்லை. அதோடு, இந்த பரிசோதனை மையம், பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
மருத்துவமனை வளாகத்தில், மூலைக்கு ஒன்றாக, பரிசோதனை கூடம் இயங்கி வருவதால், அவை இருக்கும் இடம் தெரியாமல், நோயாளிகள், பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொன்றையும், அலைந்து, தேடி கண்டுபிடித்து, பரிசோதனை கூடத்தை சென்றடைய மணி கணக்கில் தாமதமாகிறது.
அதனால், பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட ரத்தத்தின் தன்மை மாறி விடுவதாக, டெக்னீசியன்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில், பழைய டீன் ரூம் உள்பட ஸ்திர தன்மை கொண்ட பல கட்டிடங்கள், பயன்பாடின்றி, மூடியே கிடக்கின்றன. எனவே, நோயாளிகளின் நலன் கருதி, அனைத்து, பரிசோதனை மையங்களையும் ஒரே கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம், போர்கால அடிப்படையில் நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய முன் வரவேண்டும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்