கோவை : நுகர்வோர் கோர்ட் பிறப்பிக்கும் வாரன்ட்களை போலீசார் புறக்கணிப்பதால், வழக்கு தொடுப்பவர்கள்
அதிருப்தி அடைகின்றனர்.
கோவை
மாவட்ட நுகர்வோர் கோர்டில் மாதந்தோறும் குறைந்தது 45 வழக்குகள் விசாரித்து
தீர்ப்பு கூறப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோருக்கு இழப்பீடு கிடைக்கிறது.
விற்பனையில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கோர்ட்
உத்தரவை மதிக்காமல், வாரண்ட் பிறப்பித்தும் சில நிறுவனங்கள் ஏறக்குறைய 20
ஆண்டுகளாக தப்பித்தும் வருகிறது.
நுகர்வோர் கோர்ட் வழங்கும் வாரன்ட்களை
செயல்படுத்தும் பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. கோவையில் உள்ள நுகர்வோர்
கோர்ட் அனுப்பும் வாரன்ட்டுகளை பெற்றுக் கொள்ளும் போலீசார், இதை அமல்படுத்த
நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.
இக்கோர்ட்டில்
கடந்த 1996 முதல் இன்று வரை ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவைகளில் சிலவற்றை குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டு கொள்ளாததால், இவர்களை
கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில்
மட்டும் 36 வாரன்ட்டுகள் கிடப்பில் உள்ளன. பலமுறை போலீஸ் தலைமையிடத்துக்கு
தெரிவித்தும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இதனால் நுகர்வோர் கோர்ட்
இவ்வாரண்ட்களை போலீசாருக்கு அனுப்புவதில்லை. ஆனால் டில்லி,ராஜஸ்தான்,
உ.பி., மாநிலங்களுக்கு அனுப்பும் வாரன்ட்கள் உடனடியாக
செயல்படுத்தப்படுகின்றன.
நுகர்வோர் கோர்ட் வாரன்ட்கள், குற்றம்
சாட்டப்பட்டவர்களின் கையில் கிடைத்ததும், தங்கள் வக்கீலுடன் கோவை
கோர்ட்டிற்கு வந்து விடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள எந்த மாவட்ட
போலீசார் தான் வாரன்ட்களை கண்டு கொள்வதே இல்லை.
சென்னை, கோவை கமிஷனர்
அலுவலகங்கள், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம்,கோவை மற்றும் சேலம்
எஸ்.பி.,அலுவலகங்களுக்கு 30 வாரண் ட்கள் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வாரன்ட்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாமல்"கிணற்றில்
போட்ட கல்லாக' எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் கிடக்கின்றன.
கடந்த
1998ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 வாரன்ட்கள் வீதம் 99
வாரன்ட்கள் தேங்கிக் கிடக்கின்றன. அதிபட்சமாக கடந்த 2011ம் ஆண்டு 19
வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ்
நடவடிக்கை இல்லாததால், பொதுமக்களில் பலர் கோர்ட்டில் தீர்ப்பு கிடைத்தும்,
தீர்வு காணமுடியாமல் ஆண்டுகணக்கில் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.