தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பவர் டில்லர், மரம் ஏறும் கருவி, நெல் அறுவடை இயந்திரம் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவதற்கு அரசு 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தேவைப்படுவோர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்க அரசாணை வந்துள்ளது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு வேளாண் இயந்திரங்கள் 50 சதவீத மானியத்திலும் அதிகப்பட்சமாக நெல் அறுவடை இயந்திரத்திற்கு 4 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்த திட்டத்தின் கீழ் மக்காச்சோள அறுவடை இயந்திரம், பலவகை பயிர்கள் கதிரடிக்கும் இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம், விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், நேரடி நெல் விதைப்பு கருவி, தென்னை மரம் ஏறும் கருவி, வைக்கோல் கட்டும் இயந்திரம், பவர் டில்லர், நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை மானியத்தில் வழங்க 83 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 60 சதவீத மானியத்திலும், அதிகப்பட்சமாக நெல் அறுவடை இயந்திரத்திற்கு 5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்த பிரிவின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கும் பொருட்டு 32 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானியத்தில் விவசாயிகளுக்கு பவர் டில்லர், டிராக்டர், சுழற்கலப்பை ஆகிய இயந்திரங்கள் வாங்குவதற்கு 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வந்துள்ளது.
பவர் டில்லர், டிராக்டர் ஆகியவற்றிற்கு மானியமாக 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சுழற்கலப்பை வாங்குவதற்கு 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக விபரங்கள் பெறுவதற்கும், விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கும் விவசாயிகள் கீழ்கண்ட அலுவகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தார், ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ளவர்கள் கோவில்பட்டி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரையும், தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகள் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் திருச்செந்தூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அணுக வேண்டும்.
விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தினை கம்ப்யூட்டர் பட்டா, சிட்டா அடங்கல், ரேஷன்கார்டு நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பித்து அரசின் மானிய திட்டம் மூலம் பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.