தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் திமுகவில் இருந்து விலகி அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். "தீவிரமாக கட்சி பணியாற்றுவேன்' என நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர் சவரிமங்கலம் முத்துசாமி. அரசு போக்குவரத்துகழகத்தில் சுமார் 19 ஆண்டுகள் ஊழியராக பணியாற்றிய அவர், ஆரம்ப காலத்திலே அதிமுக தீவிர உறுப்பினராக இருந்து வந்தார். கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக அரசு ஊழியர் பதவியை ராஜினமா செய்தார். இவரது மனைவி சவரிமங்கலம் பஞ்சாயத்து தலைவியாக பணியாற்றியுள்ளார்.
அனிதா.ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த போது சவரிமங்கலம் முத்துசாமியும் திமுகவிற்கு சென்றார். திமுகவிற்கு சென்றாலும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் முத்துசாமி இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, நகர செயலாளர் ஏசாதுரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் காந்தி (எ) காமாட்சி, ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மூர்த்தி, தர்மசீலன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளதால் ஓட்டப்பிடாரம் பகுதியில் தீவிரமாக முதல்வர் ஜெ.,உத்தரவுப்படி கட்சி பணியில் ஈடுபடுவேன் என்றும் சவரிமங்கலம் முத்துசாமி கட்சி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.