கோவில்பட்டி: கோவில்பட்டியில் பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென இளைஞர் காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கோவில்பட்டியில் பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கில் இரண்டு மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் அதிக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், அதேநேரத்தில் இதனருகேயுள்ள ஆவல்நத்தம், மூப்பன்பட்டி கிராம பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவிகள், ரேஷன் கடைக்கு செல்லும் பெண்கள் என பலர் சென்று வருதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட கடைகளில் மது அருந்தும் நபர்கள் பெண்களை கேலி செய்வதும், பாட்டில்களை வீசுவதும், அதிகமாக குடித்துவிட்டு அரை நிர்வாண கோலத்தில் படுத்து கிடப்பதும் தொடர்ந்து வருவதாக இளைஞர் காங்., கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இக்கடைகளுக்கு அருகில் அதிகமாக நடந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆகவே அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பே குறிப்பிட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி லோக்சபா தொகுதி இளைஞர் காங்., துணை தலைவர் ரமேஷ்மூர்த்தி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.