திசையன்விளை:திசையன்விளை நகைக் கடைகொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திசையன்விளை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த நவ.2ல் கதவை உடைத்து 500 கிராம் தங்கம், 22 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. திசையன்விளை இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து இதுதொடர்பாக கடந்த டிச.19ம் தேதி சென்னையை சேர்ந்த பாண்டியராஜன், கேரளாவை சேர்ந்த சித்திக் ஆகியோர் நெல்லை தனிப் படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரனையில் நகைக் கடை கொள்ளையில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கங்கைகொண்டானில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் வேனில் இருந்த 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த செல்வம் (எ) செல்வராஜ், நாமக்கல் மாவட்டம் பள்ளியப்பாளையத்தை சேர்ந்த நாகரத்தினம், சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஏமலம் முருகன் (எ) கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாவட்டம் வசனாங்குப்பத்தை சேர்ந்த சூப்பர் என்ற சிவப்பிரகாசம் என தெரியவந்தது.
இவர்கள் திசையன்விளை நகைக் கடை கொள்ளையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இக்கொள்ளையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் தேடி வந்தனர்.
வள்ளியூர் பஸ் ஸ்டாண்டில் நகைக் கடை கொள்ளையில் தொடர்புடையவர்கள் நிற்பதாக திசையன்விளை போலீசுக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வள்ளியூர் டி.எஸ்.பி.ஸ்டான்லிஜோன்ஸ் திசையன்விளை இன்ஸ்பெக்டர் முருகன் எஸ்.ஐ.க்கள் முத்து, ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும்படி நின்ற சிலரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரனையில் விழுப்புரம் அருணாசலமுதலியார் தெருவை சேர்ந்த முத்து மகன் சந்தோஷ்(27), அரியலூர் கிளாக்குறிச்சியை சேர்ந்த பூராசாமி மகன் குணா (எ) குணசேகர்(37) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 60 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. விசாரனையில் தங்கத்தை கேரளாவிற்கு விற்பனை செய்ய கொண்டு செல்ல இருப்பது தெரிய வந்தது. இவர்களுக்கு தமிழகத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.