திருநெல்வேலி:நெல்லை அருகே தனியார் பைக் மோதியதில் மொபட்டில் சென்ற 2பேர் படுகாயமடைந்தனர்.
பாளை., வெள்ளக்கோவில் ஆதிமூலம்(28), படப்பக்குறிச்சி சந்திரபோஷ்(55) ஆகியோர் பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று மொபட்டில் கரையிருப்பு, சிதம்பராபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். நெல்லை ஜங்ஷனில் இருந்து கழுகுமலை நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது.
விபத்தில் மொபட்டில் சென்ற ஆதிமூலம், சந்திரபோஷ் படுகாயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.